குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள மாண்ட்வி தாலுகாவில், 33 கிராமங்களுக்குத் குடிநீர் வழங்கும் உன்னதமான நோக்கத்தோடு 21 கோடி ரூபாய் செலவில் ஒரு பிரம்மாண்ட வாட்டர் டேங்க் கட்டப்பட்டது. சுமார் 11 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த டேங்க், நேற்று முன்தினம் (ஜனவரி 19) சோதனை ஓட்டத்தின் போது மொத்தமாக இடிந்து விழுந்தது. வெறும் 9 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பிய போதே, அந்த 15 மீட்டர் உயரமான டேங்க் தாங்க முடியாமல் சரிந்தது அங்கிருந்தவர்களை அலற வைத்திருக்கிறது.

​இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட மூன்று தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். “நல்லவேளை… ஒருவேளை திறப்பு விழா முடிஞ்சு மக்கள் நடமாட்டம் இருக்குறப்போ இது நடந்திருந்தா எத்தனையோ உயிர் போயிருக்குமே” என அந்த ஊர் மக்கள் சொல்லும்போதே நெஞ்சு பதறுது. சிமெண்ட் பூச்சுகள் தானாகவே பெயர்ந்து விழுவதைப் பார்த்தால், இது அப்பட்டமான ஊழல் என்பது வெளிப்படையாகத் தெரிவதாக ஊர் மக்கள் கொதித்துப்போய் உள்ளனர்.