தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சந்தன பிரியா பசுபதி பாண்டியன், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவிற்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த அவர், இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரிப்பதாக உறுதி அளித்தார்.
இந்த ஆதரவு முடிவானது, குறிப்பாகத் தென் மாவட்டங்களில் அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். கடந்த காலங்களில் தேவேந்திர குல வேளாளர் மக்களின் வாக்குகளைப் பெறுவதில் கடும் போட்டி நிலவி வந்த சூழலில், தற்போது சந்தன பிரியா அதிமுக பக்கம் சாய்ந்திருப்பது தேர்தல் களத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
