அடுத்த ஆண்டு நடைபெற தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 100 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி சட்டமன்றத் தொகுதியில் பேராசிரியர் ரகுபதி பீமன் (46) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பி.எச்.டி பெற்றுள்ள இவர், கையூட்டு ஒழிப்பு பாசறையின் மாநில பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை பீமன் ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின் தற்போது விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதே மாவட்டத்தின் கூடலூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் கார்த்திக் (31) போட்டியிடுகிறார். கல்லூரி படிப்பை முடித்த இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது பெற்றோர் ராமகிருஷ்ணன்–விஜயலட்சுமி தாயகம் திரும்பியவர்களாக, அரசு தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களாக உள்ளனர். கார்த்திக், தகவல் தொழில்நுட்ப பாசறையின் மாநில இணைச் செயலாளராக செயல்பட்டு வருகிறார்.
மேலும் நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ள இந்த முதல்கட்ட வேட்பாளர் பட்டியல், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கட்சி தீவிரமாக களமிறங்க உள்ளதை வெளிப்படுத்துகிறது.
