தேசிய மகளிர் ஆணையத்துக்கு சென்ற 2022 ஆம் வருடத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 30 ஆயிரத்து 957 புகார்கள் வந்துள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த 2021 ஆம் வருடத்தில் 30 ஆயிரத்து 864 ஆக இருந்தது. இந்த 30 ஆயிரத்து 957 புகார்களில் 9,710 புகார்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை எனும் அடிப்படையிலான பெண்களுக்கு எதிரான உணர்வுப்பூர்வ புகார்களுடன் தொடர்புடையவை ஆகும்.

இதையடுத்து 6,970 குடும்ப வன்முறை புகார்கள், 4,600 வரதட்சணை கொடுமை புகார்கள் வந்துள்ளது. இந்த புகார்களில் அதிகளவாக 54.5% அளவுக்கு (16,872) உத்தரபிரதேசத்தில் இருந்து வந்துள்ளது. அதன்பின் டெல்லி (3,004), மராட்டியம் (1,381), பீகார் (1,368) மற்றும் அரியானா (1,362) போன்றவை இருக்கிறது. தேசிய மகளிர் ஆணையத்துக்கு சென்ற 2014 ஆம் வருடத்தில் 33,906 புகார்கள் வந்துள்ளது.

8 வருடங்களில் இல்லாத அடிப்படையில் அதிகளவாக 2022 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்திற்கு வந்துள்ளது. பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் 2,523 புகார்களும், பாலியல் வன் கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை முயற்சி தொடர்புடைய 1,701 புகார்களும், பெண்கள் புகாரளிக்க வரும் போது அதனை போலீசார் அலட்சியம் செய்வது தொடர்புடைய 1,623 புகார்களும், சைபர் குற்றங்கள் தொடர்புடைய 924 புகார்களும் வந்துள்ளது என தகவல் தெரிவிக்கிறது.