சென்ற 2022 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் GST ரூபாய்.1,,49,507 லட்சம் கோடி வசூலாகி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து 10வது முறையாக நாட்டின் மாத GST வரிவருவாய் ரூபாய்.1.4 லட்சத்தை கடந்து உள்ளது.

இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய GST வருவாயானது ரூபாய்.26, ஆயிரத்து 711 கோடி ரூபாயாக இருப்பதாகவும், மாநில GST  வருவாயானது ரூபாய்.33 ஆயிரத்து 357 கோடியாக உள்ளதாகவும், ஒருங்கிணைந்த GST வருவாயானது 78 ஆயிரத்து 434 கோடி ரூபாயாக இருப்பதாகவும் மத்திய நிதிதுறை அமைச்சகம் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

இவற்றில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான வரி ரூபாய்.40 ஆயிரத்து 263 கோடியும், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீது விதிக்கப்பட்டது உள்ளிட்ட செஸ் வரி ரூபாய்.11 ஆயிரத்து 5 கோடியும் அடங்கும்.