சேலம் அஸ்தம்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, மாண்புமிகு அம்மா அவர்கள் ஏழை – எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ – மாணவி சிறப்பான கல்வி கிடைக்க வேண்டும். அதற்காக ஏராளமான திட்டங்களை வழங்கினார்கள். பள்ளிக்கு போவதற்கு சைக்கிள்… பள்ளியிலே படிக்கின்ற குழந்தைகளுக்கு புத்தகங்கள்.. நோட்டுகள் கொண்டு போவதற்கு பை… இப்படி பல திட்டங்களை கொடுத்தார்கள்.

அதேபோல பிளஸ் டூ மாணவர்களுக்கு உதவித்தொகை இதையெல்லாம் அண்ணா திமுக ஆட்சியிலே கொடுக்கப்பட்ட திட்டங்கள். இன்றைக்கு இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களை ஊக்கவிக்க வேண்டும். குறிப்பாக ஏழை – எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ – மாணவியும் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்பதுதான் அண்ணா திமுகவினுடைய நோக்கம்.

அண்ணா திமுக  அரசியல் திட்டம்.  அதேபோல அதிகமான பள்ளிகள். ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி,  உயர்நிலைப்பள்ளி அதிகமாக திறந்ததும் அண்ணா திமுக அரசாங்கத்திலே தான்…  அதேபோல ஏழை – எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ – மாணவி குறைந்த கட்டணத்திலேயே உயர் படிப்பு,  பட்டப்படிப்பு படிப்பதற்கு அதிகமான கலைக் கல்லூரிகள்,

மருத்துவக் கல்லூரிகள்,  சட்டக் கல்லூரிகள், நடை மருத்துவ கல்லூரி, வேளாண் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஐடி கல்லூரி என்று அதிகமான கல்லூரிகளை திறந்ததும் அண்ணா திமுக அரசாங்கம் என்பதை மக்களிடத்திலே எடுத்துச் சொல்ல வேண்டும்.  அதிகமாக கல்வி கற்போரின் எண்ணிக்கை இன்றைக்கு உயர்ந்திருக்கிறது. 2019 – 2020ஆம் ஆண்டிலே இந்தியாவிலேயே உயர் கல்வி படிப்பதிலே முதல் மாநிலம் என்ற பெருமையை நாம் பெற்றோம் என தெரிவித்தார்.