2012-ல் மாயன் காலண்டர் முடிவடைந்தால் உலகம் அழிந்துவிடும் என்று கிளம்பிய பீதியை நாம் இன்னும் மறந்திருக்க மாட்டோம். ஆனால், இப்போது இஸ்ரேலில் 2,000 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்திருக்கும் ஒரு ‘சிவப்பு நிறக் கன்றுக்குட்டி’ மீண்டும் உலக அழிவு குறித்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது. யூத மற்றும் கிறிஸ்தவ மத நூல்களின்படி, ஒரு முழுமையான சிவப்பு கன்றுக்குட்டி பிறப்பது ‘உலக முடிவு’ அல்லது ‘மசிஹா’ (தெய்வீகத் தூதர்) வருகையின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.

​எருசலேமில் உள்ள டெம்பிள் இன்ஸ்டிடியூட் இந்த அபூர்வக் கன்றுக்குட்டியைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இது முழுவதும் சிவப்பாக இருக்கிறதா அல்லது வேறு நிறங்கள் கலந்துள்ளதா என்பதை நிபுணர்கள் சோதித்து வருகின்றனர். ஒரு பக்கம் இது வெறும் தற்செயலான நிகழ்வு என்று மக்கள் கூறினாலும், மறுபக்கம் இஸ்ரேல் மற்றும் அண்டை நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த ‘சிவப்பு கன்று’ பிறந்தது ஏதோ ஒரு பெரிய மாற்றத்தின் அறிகுறி எனப் பலரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இது இப்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.