சீனாவைச் சேர்ந்த ஒரு பிரபல இன்ஃப்ளூயன்ஸர், ஆப்பிரிக்காவின் வீதிகளில் பெண்கள் எந்தளவுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதைச் சோதிக்க ஒரு ‘ரிஸ்க்’ எடுத்தார். இதற்காக அவர் பெண் போலவே மேக்கப் போட்டு, விக் வைத்து, அழகான கவுன் அணிந்து வீதியில் வலம் வந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்ததை விட நிலைமை மிக மோசமாக மாறியது. அவர் பெண் என்று நினைத்து அந்த ஊர் வாலிபர் ஒருவன் பின்னாடியே சுற்ற ஆரம்பித்து, மோசமான வார்த்தைகளால் கேலி செய்து, அத்துமீறி நடக்க முயன்றான்.
🔥🚨VIRAL NOW: A Chinese male influencer decided to dress up as a woman and walk down a street in Africa as ‘an experiment’ and the results were disturbing.
— Dom Lucre | Breaker of Narratives (@dom_lucre) March 4, 2026
சீன இன்ஃப்ளூயன்ஸர் எவ்வளவோ தடுத்தும், அந்த வாலிபர் விடாமல் டார்ச்சர் செய்த காட்சிகள் சிசிடிவி மற்றும் கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த இளைஞன் பேசிய ஆபாசமான வார்த்தைகளை வீடியோவில் வெளியிட முடியாமல் ‘பீப்’ சத்தம் போட்டு மறைக்கும் நிலைக்கு ஆளானார் அந்த இன்ஃப்ளூயன்ஸர். “பெண்கள் தினமும் வெளியே செல்லும்போது இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கிறார்களா?” என இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. எக்ஸ் (X) தளத்தில் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்ட இந்த வீடியோ, பெண்களின் பாதுகாப்பு குறித்த கசப்பான உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளது.
