
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், இந்த நிமிஷம் வரைக்கும் தமிழ்நாட்டிலே இருந்துகிட்டு தான் இருக்கும். பட்டாவாக மாறுது, கட்டிடங்களாக மாறுகிறது. எது எப்படி இருந்தாலும் சரி, தமிழக அரசு உடனடியாக பனை மரங்கள், தென்னை மரங்கள் எந்த அப்ரூவல் கொடுத்தாலும்… வீடாக இருந்தாலும் சரி. காடாக இருந்தாலும் சரி. நகரமாக இருந்தாலும் சரி. நாடாக இருந்தாலும் சரி.
ஒரு ஏக்கர்ல 20 தென்னை மரம், 20 பனைமரம் நடனும்னு அமல்படுத்தனும். தயவு செஞ்சு சட்டம் போடணும்… நாங்க வந்து அதை அமலுக்கு கொண்டு வருவோம். மதுவை ஒழித்த பிறகு 13 வருஷம் ஆகும் பனை மரங்கள் பயன்பாட்டிற்கு வர…. தென்னை மரம் ஆறு வருஷத்துல வந்துரும். இதோ பாருங்க தென்னை மரம் சுத்திலும் நான் வச்சது, இன்னைக்கு 15 வருஷமா காச்சிகிட்டு இருக்கு… அதனால கள் உணவாக பார்க்கும் பட்சத்தில், அதை புட்டியில் அடைத்து… நல்லபடியாக குடிக்கு அடிமையானவர்கள் அதை பயன்படுத்தலாம். அந்த மாதிரி ஒரு விலக்கு கொடுக்கலாம்.
விஜயகாந்துக்கு பதமா பூஷன் பாராட்டு கொடுத்ததற்கு, நன்றி பாராட்டுகிறேன். பத்மபூஷன் விஜயகாந்த் அண்ணன் இறந்து விட்டார் என பேசி முடித்தார். உடனே மன்சூர் அலிகான் அருகே இருந்த அவர் கட்சி வக்கீல் பேசும் போது, அண்ணன் மன்சூர் அலிகான் அவர்கள் எனக்கு நீண்ட நாள் நண்பர். அவரைப் பற்றி சில கருத்துக்கள் சொல்ல வேண்டும் என்றால், உலகத்துக்கே தெரியும்… மிகவும் எளிமையானவர், மிகவும் எதார்த்தமானவர்,
எதார்த்தமான வார்த்தைகளை மக்களுக்காகவும், தான் சார்ந்து இருக்கின்ற சமுதாயத்திற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் ஜாதி, மதம் இல்லை என்று சொல்லக்கூடியவர். மீடியா எல்லாருக்கும் தெரியும். எத்தனையோ பேருக்கு அவர் குரல் கொடுத்து, அதனால அவருக்கு பாதிப்பு வந்திருக்கிறது. சமுதாய மக்களுக்காக ஜாதி – மதத்தை கடந்து அவர் யதார்த்தமா பேசி,
இந்த நாட்டிலே பல துன்பங்களை அனுபவித்திருக்கிறார். அவரைப் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால் நிச்சயமாக நல்லது நடக்கும். இன்றைக்கு அவர் அடி எடுத்து வைத்திருக்கிறார். அவர் சொன்னது போல ஒரு வெற்றி அரசியலை காண வேண்டுமென்று இந்த நேரத்திலே உங்கள் சார்பாக வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.