சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மியூர் பகுதியில் சாம் ஏசுதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாம்பரத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சிவா, ராஜவேல் ஆகியோர் அறிமுகமாகினர். இருவரும் தங்களுக்கு சொந்தமில்லாத நிலத்தை விற்பனை செய்வதாக கூறி ஏசுதாஸிடம் 4 லட்ச ரூபாயை வாங்கி உள்ளனர். அதற்கு பதிவு செய்யப்படாத கிரைய ஒப்பந்தம் ஒன்றையும் வாங்கியுள்ளனர். இந்நிலையில் கிரைய ஒப்பந்தத்தில் கூறியபடி நிலத்தை பதிவு செய்து கொடுக்காததால் பணத்தை திரும்ப தருமாறு சாம் ஏசுதாஸ் கேட்டுள்ளார்.

அப்போது ராஜவேலும், சிவாவும் ஏசுதாசுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சாம் ஏசுதாஸ் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் தாம்பரம் மாநகர மத்திய குற்ற பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் சுமார் 51 பேரிடமிருந்து ராஜவேலுவும், சிவாவும் 2 கோடிஏ 13 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.