திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ் சாத்தமங்கலம் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர்  தனக்கு சொந்தமான இரண்டு லாரிகளை கடந்த 26-ஆம் தேதி கீழ் சாத்தமங்கலம் பைபாஸ் ரோட்டில் இருக்கும் பெட்ரோல் பங்க் எதிரே நிறுத்தியுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் லாரிகளில் இருந்த பெரிய பேட்டரிகளை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சதீஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மேலதாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சிவா, பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.