கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்த இரண்டு பேரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது மதுபோதையில் இருந்த 2 பேரும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்தனர். இதனால் போலீசார் அவர்களை கண்டித்து இரண்டு பேருக்கும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே 2 பேரும் ரகளை செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்து போக்குவரத்து பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜஹாங்கீர் நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரகலையில் ஈடுபட்ட ஆரோக்கியம், ஆறுமுகம் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.