திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கிரகுளம் குருந்துடையார்புரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் மேலப்பாளையத்தை சேர்ந்த குமரேசன் மற்றும் மகாராஜன் என்பது தெரியவந்தது.

இருவரும் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அங்கு நின்று கொண்டிருந்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் குமரேசன் மற்றும் மகாராஜன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.