திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை அண்ணா நகரில் பலவேசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மாரியம்மாள் சமாதானபுரம் பெல் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து டவுன் செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறி உள்ளார். அப்போது பேருந்தில் பர்தா அணிந்திருந்த ஒரு பெண் மாரியம்மாள் கழுத்தில் கிடந்த இரண்டு பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார்.

உடனடியாக மாரியம்மாள் சுதாரித்துக் கொண்டு அந்த பெண்ணையும், அவருடன் வந்த மற்றொரு பெண்ணையும் பயணிகள் உதவியுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்த அக்காள் தங்கையான வாசுகி(29), ஆஷா(28) என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து தங்க சங்கிலியை மீட்டனர்.