கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவருடைய மனைவி ஜமீலா. இவர்களுடைய மகன் நிமிதாவுக்கு கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. ஆனால் கணவன் மனைவியிடையே  ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் மகள் வேறு திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார். இதனால் நிமிதாவின் இரண்டு வயது மகனான அக்மல் அனாதையாக மாறியதால் அவரை தாத்தா பாட்டி ஆனா அப்துல்லா ஜமீலா இரண்டு வயதிலிருந்து தன்னுடைய வீட்டில் வளர்த்து வந்துள்ளனர் .தாய் தந்தை இல்லாத பிள்ளை என்பதால் அவருக்கு அதிக அளவில் செல்லம் கொடுத்து வளர்த்து வந்துள்ளனர்.

பெரிய அளவில் தனக்கு வருமானம் இல்லாத நிலையிலும் பெரிய தனியார் பள்ளியில் அவரை படிக்க வைத்தார். அப்துல்லா ஆனால் வளர வளர அவருடைய குணம் மாறத் தொடங்கியுள்ளது. பள்ளி பருவத்திலேயே சிகரெட் மது உள்ளிட்ட தவறான பாதைகளுக்கு மாறியுள்ளார். அப்பொழுதே பக்கத்தில் இருந்தவர்கள் விடுதியில் சேர்த்து விடுமாறு கூறியுள்ளனர். ஆனால் பேரனை  தனியே விட அவர்களுக்கு மனது இல்லாமல் இருந்துள்ளது.   தீய நண்பர்களுடைய சகவாசம் அதிகமானதால் கல்லூரியில் பாதியிலேயே விட்டு மது பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்.

28 வயதானதும் எந்த வேலைக்கும் போகாமல் தினமும் போதை பொருள் வாங்குவதற்கு தாத்தா பாட்டியை மிரட்டி வந்துள்ளார். ஆனால் அவர்கள் பணம் கொடுப்பதை நிறுத்தியதால் வீட்டில் இருந்து பொருட்களை விற்று போதை பொருட்களை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் எந்த பொருட்களும் இல்லாததால் தாத்தா அப்துல்லாவிடம் பணம் கேட்டுள்ளார் .ஆனால் அவர் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த அவர்  தாத்தா பாட்டி என்றும் பார்க்காமல் அவர்கள் இருவரையும் அரிவாள்  எடுத்து வந்து தலையை துண்டு துண்டாக வெட்டி எறிந்து விளையாடிவிட்டு அங்கு இருந்து தப்பி ஓடினார். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.