மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள், உலகளாவிய விலை வீழ்ச்சியால் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி, சோயாபீன், பாமாயில் ஆகியவற்றின் சில்லறை விலைகள் கடந்த ஓராண்டில் 25 சதவீதம் குறைந்துள்ளன. மக்களவையில் நேற்று மத்திய உணவு, நுகர்வோர் விவகாரத்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதில், கடந்த ஜூலை 20 நிலவரப்படி, கச்சா சோயாபீன், கச்சா சூரியகாந்தி போன்ற முக்கிய சமையல் எண்ணெய்களின் சர்வதேச விலை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. சமையல் எண்ணெய்களின் விலையை கட்டுப்படுத்தவும், குறைக்கவும், மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் இறக்குமதி வரியை பல முறை குறைத்துள்ளது.