PM ஆவாஸ் யோஜனா என்ற பெயரில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை மத்திய அரசு 2015 ஆம் வருடம் முதல் செயல்படுத்தி வருகிறது. இதில் தகுதி வாய்ந்த அனைத்து நகர்புற பயனாளிகளுக்கும் அடிப்படை உரிமை வசதிகளோடு கூடிய அனைத்து காலங்களிலும் வீடுகளை வழங்குவதற்கான மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் மூலம் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உதவுகிறது.

இந்த நிலையில் கடந்த 2023 ஜூலை பத்தாம் தேதி நிலவரப்படி 118.90 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒப்படைக்கப்பட்ட வீடுகளில் 112.22 லட்சம் வீடுகள் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. அதில் 75.31 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை ரூபாய் 2 லட்சம் கோடி மத்திய அரசு வழங்கிய நிதியில்  1.47 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.