பிரிட்டிஷ் நடிகை எமி ஜாக்சன் சென்ற 2010-ல் ஏ.எல் விஜய் டைரக்டில் வெளியான மதராசப்பட்டினம் படம் வாயிலாக அறிமுகமானார். இதையடுத்து தாண்டவம், தெறி, ஐ, 2.0 என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் படங்கள் நடித்து வந்தார். தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் அவர் திரைப்படங்கள் நடித்தார். இதனிடையே எமி ஜாக்சன், ஜார்ஜ் என்ற நபரை காதலித்து திருமணம் செய்துகொள்ளாமலேயே ஆண் குழந்தையை பெற்றார்.

அதன்பின் சில காரணங்களால் இவர்கள் 2019-ம் வருடம் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். தற்போது பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை கடந்த 2 வருடங்களாக எமி காதலித்து வந்தார். அதோடு அடிக்கடி காதலனுடன் டேட்டிங் சென்றபோது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தன் காதலனின் பிறந்தநாளன்று அவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஒரு தொகுப்பாக பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.