இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த அறிவிப்பு வெளியானதும் அடுத்தடுத்து தளபதி 68 படம் குறித்த ஒவ்வொரு தகவலும் லீக் ஆகி நான்கு பக்கமும் காட்டுத்தீ போல பரவியது.

இதனால் கடுப்பான விஜய் வெங்கட் பிரபுவை கூப்பிட்டு லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளார். மேலும் இதே மாதிரி ஒவ்வொரு விஷயமும் வெளியானால் இந்த படத்தை நிறுத்திக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். இதனால் வெங்கட் பிரபு தனக்குத்தானே ஹவுஸ் அரெஸ்ட் போட்டு உள்ளதாக இணையத்தின் தகவல் வெளியாகி உள்ளது.