ஸ்டேனோகிராபர் கிரேடு சி மற்றும் டி பதவிக்கு மொத்தம் 2006 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் https://ssc.gov.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி மற்றும் புதுச்சேரியில் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது