“விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, மக்கள் கூடும் பொது இடத்தில் விதிகளை மீறி இயங்கி வந்த இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உழவர் சந்தை வளாகத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியை ஒட்டி இந்த டாஸ்மாக் கடைகள் செயல்படுவதை நேரில் கண்ட அமைச்சர் கடும் அதிர்ச்சியடைந்தார்.
‘பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கூடும் முக்கிய இடங்களில் இருக்கும் மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட்டே தீர வேண்டும்’ என்று கறாராகக் குறிப்பிட்ட அவர், சற்றும் தாமதிக்காமல் சம்பவ இடத்திலிருந்தே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்குத் தொலைபேசி வாயிலாகப் பறக்கும் உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
அமைச்சரின் இந்த மின்னல் வேக அதிரடி நடவடிக்கையை அடுத்து, அந்த இரண்டு டாஸ்மாக் கடைகளும் உடனடியாக மூடப்பட்டன. சமூகப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து அமைச்சர் வன்னியரசு மேற்கொண்ட இந்த அதிரடி ஆக்ஷன் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளதுடன், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது காட்டுத்தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.”
2 TASMAC-ஐ மூடுங்க..சீக்கிரம்… – பார்த்ததும் சட்டென அமைச்சரிடம் இருந்து பறந்த போன் கால் pic.twitter.com/r4DCTheI76
— anushiya (@anushiyaxx) June 8, 2026
“>
