உத்தரப் பிரதேசத்தின் பால்லியா மாவட்டத்தில், 17 வயதுச் சிறுமி ஒருவரை 25 நாட்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த பாபுராம் (21) என்ற இளைஞன் கைது செய்யப்பட்டான். சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மும்பை மற்றும் புனேவுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
இதேபோல், 18 வருடங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவின் வசாயில் நடந்த ஒரு கொலை வழக்கில் குற்றவாளியை இப்போது போலிசார் கைது செய்துள்ளனர். 2007ஆம் ஆண்டு நடந்த 5 வயதுச் சிறுமி கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலைக் குற்றவாளியை, தீவிர விசாரணைக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தில் வைத்து போலிசார் கைது செய்துள்ளனர். நீண்ட காலமாகத் துப்புத் துலங்காமல் இருந்த இந்தக் கொலை வழக்குக்கு இதன் மூலம் நியாயம் கிடைத்துள்ளது.
