கேரளாவில் உள்ள மூவாற்றுபுழா பகுதியில் கடந்த 4-ம் தேதி ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறியது. அதாவது ஒரு வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென காணாமல் போனது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த காரின் நம்பரை மாற்றி ஓட்டுவது தெரிய வந்தது.
அந்த தகவலின் படி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று அந்தக் காரை மடக்கி பிடித்ததோடு தப்பி ஓட முயன்ற வாலிபரையும் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அல்சாபித் (19) என்பது தெரிய வந்தது. இந்த வாலிபர் தன்னுடைய கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருப்பதற்காக காரை திருடியுள்ளார்.
அதாவது திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் வாலிபருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் அந்த பெண்ணுடன் வாலிபர் உல்லாசம் ஆக இருக்க விரும்பியுள்ளார். இதற்கு கள்ளக்காதலியும் சம்மதம் தெரிவித்தார்.
ஆனால் விடுதிக்கு சென்றால் மாட்டி விடுவோம் என்பதால் ஒரு காரை திருடி அதற்குள் வைத்து கள்ளக்காதலியுடன் உல்லாசம் அனுபவிக்க திட்டம் தீட்டினார். அதன்படி அவர் காரைத் திருடி பதவி எண்ணை மாற்றியதோடு பின்னர் கள்ள காதலியுடன் ஊர் ஊராக சென்று உல்லாசமாக இருந்தார்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும் அவரை காணவில்லை என குடும்பத்தினர் கடந்த 5-ம் தேதி போலீசில் புகார் கொடுத்ததும் தெரிய வந்தது. தற்போது அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள.
