ஜப்பானில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனம் demae-can-ஐ 2 வருடங்களாக மோசடி செய்து ரூ.21.10 லட்சம் மதிப்புள்ள உணவை சாப்பிட்டு வந்த நாகோயா நகரத்தைச் சேர்ந்த தகுயா ஹிகாஷிமோடா (38) என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

அதாவது அவர் தனது வீட்டிலிருந்தே விரும்பிய உணவை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து, பணம் செலுத்தினார். உணவு டெலிவரி வந்ததும் உணவை சாப்பிட்ட பிறகு, “நான் ஆர்டர் செய்த உணவு வரவில்லை, பணம் திருப்பி கொடுங்கள்” என கஸ்டமர் சர்வீஸ் சென்டருக்கு தெரிவித்து வந்தார்.

அவர் இரண்டு வருடங்களில்1095 முறை மோசடி செய்துள்ளார். நிறுவனம் “கஸ்டமர் முக்கியம்” என்ற கொள்கையின் பேரில், பணத்தை திருப்பி கொடுத்து வந்ததால், தகுயா தனது விருப்பமான உணவை சாப்பிட்டு, அதற்காக செலுத்திய பணத்தையும் திருப்பிப் பெற்றார். 124 கணக்குகள், பல போலி சிம் கார்டுகள், போலி பெயர்கள் மற்றும் முகவரிகள் பயன்படுத்தி மோசடி செய்தார். கான்டாக்ட்-லெஸ் டெலிவரி முறையையும் பயன்படுத்தினார்

கடந்த ஜூலை 30 அன்று, தகுயா ஒரு ‘பென்டோ’ மற்றும் ‘சிக்கன் ஸ்டிக்ஸ்’ ஆர்டர் செய்து சாப்பிட்டார். உணவை சாப்பிட்டபின், நேரடியாக பேசி அல்லாமல், ஆன்லைன் சாட் மூலம் “வரவில்லை” என்று தெரிவித்து பணம் திருப்பி வாங்கினார். இதனால் demae-can நிறுவனத்திற்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணை நடத்தப்பட்டபோது அவரது மோசடி வெளிப்பட்டது.

மேலும் இந்த சம்பவத்துக்குப் பிறகு, demae-can நிறுவனம் தனது அனைத்து வாடிக்கையாளர்களின் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை முன்பே உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.