பால்கனியில் புறாக்களின் எச்சம் மற்றும் சத்தத்தால் அவதிப்படும் அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்குத் தீர்வாக, ஓம் படேல் (@om_patel5) என்ற மென்பொருள் பொறியாளர் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் தானியங்கி தண்ணீர்த் துப்பாக்கியை உருவாக்கியுள்ளார்.

பால்கனியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா, அங்கு வரும் மனிதர்கள் மற்றும் துணிகளிலிருந்து புறாக்களைத் துல்லியமாக வேறுபடுத்தி அறியும் வகையில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளது.புறா அமர்ந்த அடுத்த நொடியே, AI சமிக்ஞை அனுப்ப, தானியங்கி கருவி தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அந்தப் பறவையை விரட்டுகிறது.

“>

 

எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ 19 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. பறவைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாமல், தண்ணீரை மட்டும் பயன்படுத்தி அவற்றை விரட்டும் இந்தத் தொழில்நுட்பத்தை நெட்டிசன்கள் “அற்புதமான மூளை” என்று பாராட்டி வருகின்றனர்.