தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் திருவிழா கலைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மிக முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த 5 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும், வாக்காளர் பட்டியலில் தகுதியான ஒருவர் கூட விடுபடக் கூடாது என்ற ஒற்றை நோக்கில் ‘சிறப்புத் திருத்தப் பணிகள்’ (S.I.R) மிகத் தீவிரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திருத்தங்களுக்குப் பிறகு தற்போது தேர்தல் களம் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், ஜனநாயகக் கடமையாற்றத் தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்வதை உறுதி செய்யத் தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகக் கூறியுள்ளார்.