தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எவ்விதப் புகாருக்கும் இடமின்றி மிக நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இது குறித்துத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறுகையில், இந்தத் தேர்தல் பணிகளுக்காக மட்டும் மொத்தம் 25 லட்சம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தேர்தல் முறையை உலக நாடுகளும் கவனித்து வரும் நிலையில், சுமார் 14 நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தத் தேர்தல் நடைமுறைகளைப் பார்வையிட வர உள்ளனர்.

எந்தவொரு முறைகேடும் இன்றி நேர்மையான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து விதமான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.