சமூக வலைதளங்களில் பரவி வரும் அவதூறு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் பெண்களிடம் தவறாகப் பேசியது போன்ற ஒரு உரையாடல் ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வைரலானது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி தன்னை வீழ்த்த இவ்வளவு கீழ்த்தரமாகச் செயல்படுவது வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் கொள்கை ரீதியாக விவாதிக்கலாம் என்றும், ஆனால் பத்துப் டாலர் செலவில் போலி உரையாடல்களை உருவாக்கி தனிமனித ஒழுக்கத்தைக் கொச்சைப்படுத்துவது மிகவும் கேவலமான செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நான் ஒருபோதும் யாரிடமும் தவறாக நடந்துகொண்டதில்லை” என்று உறுதிபடத் தெரிவித்துள்ள ராஜீவ் காந்தி, இது போன்ற போலியான உரையாடல்களை உருவாக்க உதவும் இணையதள முகவரியையும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் தொழில்நுட்பம் என்பது வளர்ச்சிக்குத் தான் இருக்க வேண்டுமே தவிர, ஒருவரின் வாழ்க்கையை அழிப்பதற்கு அல்ல என்று கூறியுள்ள அவர், இதுபோன்ற வீணான அவதூறுகள் தனது குரலை ஒருபோதும் ஒடுக்க முடியாது என்றும், தொடர்ந்து தனது அரசியல் பயணத்தை முன்னெடுப்பேன் என்றும் அந்த விளக்கத்தில் தெரிவித்துள்ளார்.
