உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் அருகேயுள்ள ராம்நகர் பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபரில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்திய சம்பவம் ஒன்று சமீபத்தில் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
17 வயதான ஒரு சிறுமி ஹெரோயின் (smack) போதைப்பொருளுக்கு அடிமையாகி, தனது பழக்கத்தைத் தொடர பணம் தேவைப்பட்டதால் பல ஆண்களுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சிறுமிக்கு ஏற்கனவே HIV தொற்று இருப்பது தெரியாமல், குறைந்தது 19 ஆண்களுக்கு அந்த வைரஸ் பரவியுள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் மீண்டும் மக்கள் கவனத்தை ஈர்த்தது, ஏனெனில் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி, ‘X’ சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட ஒரு செய்தி இதனை மீண்டும் பரபரப்பாக்கியது. அந்தப் பதிவில், “நைனிடால் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஹெரோயின் போதைக்கு அடிமையாகி, பல ஆண்களுடன் உடலுறவிற்கு சென்றுள்ளார்.
அவர்களில் சிலர் திருமணமானவர்களும் உள்ளனர். அந்த ஆண்களின் மனைவிகளுக்கும் தற்போது HIV தொற்று பரவியிருக்கிறது,” எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் வெளியாகியதற்கான ஆரம்ப கட்ட தகவல்களின் படி, பல ஆண்கள் ராம்நகரில் உள்ள ராம் தத் ஜோஷி கூட்டு மருத்துவமனையின் HIV சோதனை மையத்தை அணுகி உடல்நலக் கோளாறுகள் குறித்து புகாரளித்துள்ளனர்.
தொடர்ந்து மருத்துவ பரிசோதனை, ஆலோசனை மூலம் அவர்கள் அனைவரும் ஒரே சிறுமியுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. அதன்பின், அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் உண்மை வெளிப்பட்டது.
சிறுமி கண்ணியமற்ற சூழ்நிலையில் பணத்திற்காக உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இரண்டாவது, அந்த சிறுமிக்கு 18 வயது ஆகாததால் அவருடன் உடலுறவு வைத்த அனைத்து ஆண்களும் பாலியல் குற்றவாளிகளாக கருதப்படுவர். இது போக்சோ (POCSO) சட்டத்தின்கீழ் கடுமையான குற்றமாகும்.
சில ஆண்கள் திருமணமானவர்களாக இருப்பதால், HIV வைரஸ் அவர்களது மனைவிகளுக்கும் பரவியுள்ளது என்பது சோகமான செய்தி. இச்சம்பவம் இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கமும், பாலியல் மற்றும் HIV பற்றிய அறிவின்மை எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை வெளிக்கொணர்கிறது.
