திருப்பூர் மாவட்டம் மங்கலம் சாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் 17 வயது மாணவன், கடந்த சில நாட்களாக செல்போனில் அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், அவரிடம் விசாரித்தபோது, கணித ஆசிரியரான ஆதீஸ் (வயது 30) என்பவருடன் பேசுவதாக கூறியுள்ளார். இந்த நிலையில், அவரது தந்தை சிறுவனின் செல்போனை சோதனை செய்தபோது, அதில் ஆசிரியர் ஆதீஸ் தனது அந்தரங்க உறுப்பை படம் எடுத்து, அதை இன்ஸ்டாகிராம் வழியாக மாணவனுக்கு அனுப்பியிருப்பது தெரியவந்துள்ளது. அதனை கண்டதும் அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை, திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, ஆசிரியை ஆதீஸை கைது செய்தனர். விசாரணையில் அவர், மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், தனது அந்தரங்க உறுப்பின் புகைப்படங்களை அனுப்பியதும் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  இந்த மோசமான செயல்முறை, பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.