தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்து உள்ளனர்.

இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது “ஒரு மனிதரை 17 மணிநேரம் விசாரித்தது சட்டத்திற்கு புறம்பானது ஆகும். சிறைத்துறை விதியின் படி நாளொன்றுக்கு 3 பேர் மட்டும்தான் மனு அளித்து சந்திக்க முடியும். எனினும் செந்தில் பாலாஜியின் குடும்பத்தினர் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். நீதிமன்ற தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்” என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.