சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர் காவல் நிலையத்திற்குள் நுழைந்து அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். பொதுவாக காவல் நிலையம் என்றாலே அச்சப்படும் சூழலில், இந்தச் சிறுமி அங்கே அழுவதற்குப் பதிலாக, மிகுந்த உற்சாகத்துடன் நடனமாடத் தொடங்கினார்.
மேலும் அங்கிருந்த காவலர்கள் அந்தச் சிறுமியின் மழலை மாறாத நடனத்தையும், துறுதுறுப்பான முகபாவனைகளையும் கண்டு திகைத்துப் போனதுடன், அவளது தன்னம்பிக்கையைப் பாராட்டி வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ மூலம் வெளியாகி, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
View this post on Instagram
“>
இதனால் “காவல் நிலையங்கள் மீதான பயத்தைப் போக்கும் வகையில் இந்தச் சிறுமியின் அணுகுமுறை உள்ளது” என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். சிறுமியின் அந்த கவலைகளற்ற நடனமும், அங்கிருந்த காவலர்களின் கனிவான வரவேற்பும் பார்ப்பவர்களின் மனதை நெகிழச் செய்துள்ளது. எவ்வித பயமுமின்றி தன் திறமையை வெளிப்படுத்திய அந்தச் சிறுமிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
