
செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தென் தமிழகத்தில் ஒரு அமைதியை கொண்டு வரணும்னு விரும்புனோம். அனைத்து சமுதாய மக்களும் சமமாக முன்னேற வேண்டும் என்று நினைக்கிறோம். ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். ஒருவருடைய உரிமையை இன்னொருவர் பறிக்கக் கூடாது என்று நினைக்கிறோம். இந்த முயற்சியில் நாம் இந்தியராக இருக்கணும்… மொழி பேசக்கூடிய தமிழனாக இருக்கணும்…. மதங்களின் அடிப்படையில் இந்துக்களாக இருக்கணும்…
ஒரு குரூப் மட்டும், ஒற்றை அடையாளத்தோடு இருந்து, அவர்களின் நில உடைமைகளை பறித்து, அவர்களை வெளியேற்றுவது என்பது பாலஸ்தீனம் போல நடக்குது.. 1948இல் அந்த நாடு பாலஸ்தீனம் என்று இருந்தது. ரெண்டாக பிரித்து பாலசீனத்திற்கும் பாதியும், இஸ்ரேலுக்கும் பாதியும் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த 50, 60 வருஷத்துல….
எல்லா இடத்தையும் ஒரு குரூப் மட்டும் ஆக்கிரமித்துக் கொண்டது போல, இன்னைக்கு தென் தமிழகத்தில் அந்த மாதிரி ஒரு மிகப்பெரிய மோசமான மனித உரிமை மீறல் நடக்கிறது. இதுல ஹியூமன் ரைட்ஸ் கமிஷன் வரணும், எஸ்.சி கமிஷன் வரணும், குழந்தைகள் நல வாரியம் வரணும், உள்துறை இன்டெலிஜென்ட் பீரோ தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு…. அதே போல NIA வரணும்… இதில் மோசமான தீவிரவாதம் இருக்கு…
16 வயசு பையன் வெடிகுண்டு வீசுறானா…. இதை எதுவாக கணக்கில் வைத்துக்கொள்வீர்கள்… அருவாளை தூக்கி வீடு தேடி சென்று சக மாணவனை வெட்டுறான் என்றால், இவனோட மன வலி என்ன ? இதை சமூக அக்கறையோடு அணுக வேண்டும் என்று தான் பாக்குறேன். இடையில நல்ல சுமூகமான சூழ்நிலை இருந்தது என தெரிவித்தார்.