சமூக ஊடகத்தில் சமீபத்தில் மோசடி தொடர்பான காணொளி ஒன்று வைரல் ஆகி வருகிறது இந்த வீடியோவில் ஒரு இளைஞன் ரயில் நிலைய பிளாட்ஃபார்மில் இருக்கிறான். அவன் ஒரு இருக்கையருகே நின்று, தன் பையில் இருந்து மருந்து, பஞ்சு, பேண்டேஜ் ஆகியவற்றை எடுக்கிறான். பிறகு, பஞ்சில் மருந்து தடவி, தன் கால் மற்றும் வயிற்றில் வைத்து, பேண்டேஜ் கட்டுகிறான். இதை முடித்த பிறகு அவன் ரயிலில் ஏறுகிறான்.

ரயிலில் பயணிகள் நிரம்பி வழியும் நிலையில், பலர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த இளைஞன் தான் காயமடைந்தவன் போல் நடித்து, இருக்கையில் வசதியாக படுத்து பயணிக்கிறான். இந்த புத்திசாலித்தனமான ஏமாற்று வேலை காரணமாகவே இந்த வீடியோ வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் “noughty_flix” என்ற கணக்கில் பதிவேற்றியுள்ளனர். இதுவரை 2 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.

வீடியோவைப் பார்த்த பலர் தங்கள் கருத்துகளை கமெண்ட் செய்துள்ளனர். ஒருவர், “டிக்கெட்டை விட இதற்கு அதிக செலவு ஆகியிருக்கும்” என்று கூறியுள்ளார். மற்றொருவர், “இவன் ஒரு ஹேக்கர்” என்று பதிவிட்டுள்ளார்.