ஐதராபாத்தைச் சேர்ந்த திவ்யா மற்றும் ஜான் தம்பதிக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்துள்ளது. அங்குக் குடியேற முடிவெடுத்தபோது, தங்களின் செல்லப் பிராணியான ‘ஸ்கை’ (Sky) என்ற நாயையும் உடன் அழைத்துச் செல்ல விரும்பினர். ஆனால், ஆஸ்திரேலியாவின் கடுமையான சட்டங்கள் அவர்களுக்குப் பெரிய தடையாக இருந்தன.

 

View this post on Instagram

 

A post shared by Kahaanioftails (@kahaanioftails)

ஆஸ்திரேலிய சட்டப்படி, இந்தியாவிலிருந்து நேரடியாகச் செல்லப் பிராணிகளை அழைத்து வர அனுமதி கிடையாது. இந்தியாவானது ‘ரேபிஸ்’ (Rabies) நோய் அபாயம் உள்ள நாடாகக் கருதப்படுவதால், இங்கிருந்து செல்லும் நாய்கள் முதலில் ரேபிஸ் இல்லாத ஒரு நாட்டில் 6 மாதங்கள் தங்கியிருக்க வேண்டும்.

இந்த 6 மாத கால தங்குமிடம், மருத்துவப் பரிசோதனைகள், தடுப்பூசிகள் மற்றும் விமானக் கட்டணம் என அனைத்திற்கும் சேர்த்து சுமார் 14 முதல் 16 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனத் தெரியவந்தது.

“இவ்வளவு பணத்தை வீணாக்குவதற்குப் பதில் ஆஸ்திரேலியாவிலேயே ஒரு புது நாயை வாங்கிக் கொள்ளலாமே” எனப் பலரும் அறிவுரை கூறினர். ஆனால், “பணம் திரும்ப வரும், ஆனால் எங்கள் குழந்தையின் அன்பு திரும்பாது” என அந்தத் தம்பதி உறுதியாக நின்றனர்.