தமிழகத்தில் பத்திரபதிவு அலுவலகங்களில் கூட்டம் அதிகமாக நிரம்பி வழியும் காரணத்தால் ஒரே நாளில் 15 சர்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்களை கட்ட அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில், பத்திரப்பதிவுத்துறை சார்பாதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுக்கு வரும் பொது மக்களுக்கான உரிய அடிப்படை வசதிகளோடு நவீன முறையில் சொந்த கட்டடங்கள் கட்டப்பட வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி ஏற்கனவே 44 புதிய அரசு கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக 27.48 கோடி மதிப்பில் 18 புதிய அரசு கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கி ஆகஸ்ட் 17 அன்று அரசாணை வெளியிடப்பட்டது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் அறிவித்துள்ளார்.