தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சி தொண்டர்களிடம் பேசும்  போது, எண் மண், எண் மக்கள் யாத்திரையில் இளைஞர்கள் சாரைசாரையாக வருகிறார்கள். எனக்கே அது ஒரு விதத்தில் பயத்தை ஏற்படுத்தியது. இளைஞர்கள் நம் மீது வைத்து இருக்கக்கூடிய நம்பிக்கையை பார்க்கும் போது பயம் வருகிறது. பயத்தின் மூலமாக நன்றாக செய்ய வேண்டும் என்கிற கடமை உணர்ச்சியும் அதிகமாகிறது.

எத்தனை இளைஞர்கள் சாரை சாரையாக…  முதல் தலைமுறை சாமானிய மனிதர்கள்….  அரசியலில் இருந்து வெகு தூரம் இருந்தவர்கள்….  ஏதோ ஒரு தீப்பொறி அவர்களை தட்டி தூக்கி இருக்கிறது. என் மண்,  என் மக்கள் யாத்திரையில் நடந்து வரான். நேர்மையான ஒரு தமிழ்நாட்டை உருவாக்க முடியும் என்று நம்புறான்.  அதை பார்க்கும்போது தலைவர்கள் கிட்ட சொல்லுவேன். அந்த பயத்தோடு நமக்கு பொறுப்பும் வர ஆரம்பித்திருக்கிறது.

நமது பேச்சில் இன்னும் கொஞ்சம் கவனம் இருக்கணும். சொல்லுகின்ற செய்தி பொருத்தமாக இருக்கணும். பெண்கள் வராங்க, குழந்தைகளை கொண்டு வராங்க… மிகப்பெரிய பயம் பெண்கள் குழந்தைகளை கொண்டு வராங்க. பிறந்த குழந்தை… ஒரு மாத குழந்தை… 3 மாத குழந்தை… ஒரு குழந்தையை ஒரு தாய், ஒரு அரசியல்வாதி கைல கொடுக்கிறார்கள் என்றால் ?

அந்த தாய்க்கு அந்த அரசியல்வாதி மீது அளவற்ற நம்பிக்கை இருக்க வேண்டும். அரசியல்வாதி பக்கத்திலேயே போகக்கூடாது என்று பெண்கள் நினைப்பாங்க. ஆனால்  இன்னைக்கு பெண்கள் பாரதிய ஜனதா கட்சியையும்,  பாரதிய ஜனதா கட்சி தலைவர்களையும் நம்பி இந்த கூட்டத்தில் அவங்க பெற்றெடுத்த குழந்தைகளை கொண்டு வந்து,

இந்த குழந்தையை நீங்க ஒரு அஞ்சு நிமிஷம் வாங்கிக்கோங்க ..  என் குழந்தைக்கு பெயர் வையுங்க….  என் குழந்தை கூட போட்டோ எடுத்துக்கோங்கன்னு சொல்லும்போது….  எங்களுடைய கடமை உணர்ச்சி, பொறுப்புணர்ச்சி இன்னும் அதிகமாகிறது என தெரிவித்தார்.