ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை நகராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டடத்தின் மதிப்பு 14.50 லட்சம் ரூபாய் ஆகும்.

இந்நிலையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் மாநிலத் திமுக சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் ஆர்.வினோத் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.