குஜராத் மாநிலம் சூரத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 23 வயதான ஒரு டியூஷன் ஆசிரியை, 13 வயதான மாணவனை கடத்திச் சென்று உடல் உறவு வைத்துள்ளார். இதில், ஆசிரியை கர்ப்பம் ஆக, தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், கருவின் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படும் என்றும், அதை பாதுகாப்பாக வைத்திருக்கவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆசிரியை ஏப்ரல் 25ஆம் தேதி மாணவனை அழைத்துச் சென்று வதோதரா, அகமதாபாத், ஜெய்ப்பூர், டெல்லி, பிருந்தாவனம் என ஐந்து நகரங்களை நான்கு நாட்களில் சுற்றி வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஏப்ரல் 30 ஆம் தேதி இருவரும் ஜெய்ப்பூரில் இருந்து அகமதாபாத் நோக்கி வரும் போது, போலீசாரால் பேருந்தில் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையின் போது, ஆசிரியை மாணவனுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலாக இணைந்திருப்பதாக கூறியுள்ளார். அவர்களுக்குள் கடந்த ஒரு ஆண்டாக உடலுறவு இருந்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், மாணவன் முன்பு ம் வகுப்பில் படிக்கும்போது, அந்த ஆசிரியை அவரது வீட்டிற்கு சென்று டியூஷன் நடத்தியதாகவும், பின்னர் தனது வீட்டில் டியூஷன் நடத்தத் தொடங்கியதாகவும் தெரிவித்தார். மாணவனுக்கு புதிய உடைகள், காலணிகள், சிம் கார்டு போன்றவற்றை வாங்கி, திட்டமிட்டு வீட்டை விட்டு ஓடிச் சென்றதாகவும் விசாரணையில் கூறியுள்ளார்.
சமூக நலத்துறை, சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள், மருத்துவக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் இதில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஆசிரியைக்கு சூரத்தில் உள்ள SMIMER மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யப்பட்டு, பிறந்த குழந்தையின் டிஎன்ஏ மற்றும் மாணவனுக்கு டிஎன்ஏ பரிசோதனைகள் நடத்தப்பட்டு உண்மை உறுதி செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள், சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து சமூகத்தில் பெரும் அதிர்வையும், கவலையையும் எழுப்பியுள்ளன.
