தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும். அதே வேளையில், சில இடங்களில் கோடை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, கோவை மாவட்டங்களில் பல இடங்களில் வெயில் சுட்டெரிக்கும். ஒருசில இடங்களில் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.