பெங்களூரை சேர்ந்த ஏழு வயது சிறுமி ஒருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இதே பிரச்சினையால் தங்கள் மூத்த மகளை பறிகொடுத்த பெற்றோர் இரண்டாவது மகளைக் காப்பாற்றுவதற்காக இதயமாற்று அறுவை சிகிச்சைக்கு இதயம் தேவை என்று கடந்த வருட நவம்பர் மாதம் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் சிறுமிக்கு தேவையான இதயம் கிடைத்து அதனை 14 கிலோமீட்டர் கடந்து சிறுமி இருக்கும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதனால் மருத்துவர்கள் காவல்துறையினரின் உதவியை நாட போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் காவல் அதிகாரிகளின் உதவியோடு வெறும் 13 நிமிடத்தில் 14 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து இதயம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
