தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தமிழக அரசியலில் ஒரு மெகா திருப்பம் ஏற்பட்டுள்ளது. 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு, தற்போது காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்களும் நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்கியுள்ளனர். இதன் மூலம் 11 வருட திமுக – காங்கிரஸ் கூட்டணி முறிந்து, தவெக-வின் பலம் தற்போது 112-ஆக உயர்ந்துள்ளது.
விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், ஒரு இடத்தை ராஜினாமா செய்த நிலையில் தவெக பலம் 107 ஆகவும், காங்கிரஸின் ஆதரவுடன் சேர்த்து மொத்தம் 112 ஆகவும் அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்திக்க விஜய் ஆளுநர் மாளிகைக்குச் சென்றார்.
அங்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடிதத்துடன், புதிய அமைச்சரவை பட்டியலையும் ஆளுநரிடம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
நாளை (மே 7) விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ள நிலையில், ஆளுநர் மாளிகை வட்டாரம் பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.
35 ஆண்டுகளுக்குப் பிறகு மாமியாரும் மருமகனும் ஒரே சட்டப்பேரவையில் உறுப்பினர்களாக இருக்கும் அபூர்வ நிகழ்வும் இம்முறை அரங்கேற உள்ளது குறிப்பிடத்தக்கது.
