தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கத் தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஒரு முக்கிய நிபந்தனையை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, தவெக தரப்பில் ஆட்சியமைத்த பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க 2 வார கால அவகாசம் கோரப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, பதவியேற்ற 2 நாட்களுக்குள்ளேயே சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கெடு விதித்துள்ளதாகத் தெரிகிறது.

தற்போதைய நிலவரப்படி, 118 இடங்கள் தேவை என்ற சூழலில், தவெக மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 112-ஆக உள்ளது. இன்னும் 6 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே விஜய்யால் தடையின்றி ஆட்சியைக் காப்பாற்ற முடியும்.

ஆளுநர் விதித்துள்ள இந்த 48 மணி நேரக் கெடு, தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுயேச்சைகள் மற்றும் பிற சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற விஜய் தரப்பு தீவிரமாக களம் இறங்கியுள்ளது.

ஆளுநரின் இந்த அதிரடி உத்தரவால், விஜய்யின் அரசியல் பயணம் முதல் நாளிலேயே ஒரு மிகப்பெரிய சவாலைச் சந்தித்துள்ளது. இந்த ‘மெஜாரிட்டி’ சோதனையில் விஜய் வெல்வாரா? அல்லது தமிழக அரசியலில் மீண்டும் ஒரு திருப்பம் ஏற்படுமா? என்பதே இப்போதைய ஹாட் டாபிக்.