தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் “வாத்தி”. சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்திருக்கும் இந்த படம் நேரடியாக தெலுங்கிலும் “சார்” என்னும் பெயரில் வெளியாகியது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி 17ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் அண்மையில் நடைபெற்றது.

இதில் வெங்கி அட்லூரி, ஷரா என சிலர் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். மேலும் இந்த படம் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் நேற்று வாத்தி படத்தை பார்த்துவிட்டு தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா இயக்குனர் வெங்கி ஆட்லூரி மற்றும் தயாரிப்பாளர் இருவரையும் பாராட்டி புகைப்படம் எடுத்திருக்கின்றார். அந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.