
தமிழக சட்டசபையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன், மாண்புமிகு பேரவை தலைவர் உள்ளிட்டு சபையினருக்கு வணக்கத்தை தெரிவித்து கொண்டு, பேரவை துணை தலைவர் அவர்களே…. அரசாங்கத்தினுடைய திட்டங்களை செயல்படுத்துவது, அந்த திட்டங்களுடைய பலன்களை எல்லாம் மக்களுக்கு எடுத்து செல்வது என்பது அடிப்படையிலே அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க கூடிய அடிப்படையான ஒரு அங்கம்.
happiness index என சொல்லுவோம். அந்த வகையில் பாக்கின்ற பொழுது மகளிர் உரிமை தொகை தொடர்பாக இங்கு பல்வேறு விவாதங்கள், பல்வேறு தலைவர்கள் அரசினுடைய பதில் எல்லாம் கிடைக்கப் பெற்றோம். மரியாதைக்குரிய முதல்வர் அவர்கள்… எங்கெங்கெல்லாம் உங்கள் தொகுதிகளில் விடுபட்டு இருக்கிறார்களோ, நீங்கள் அவர்களுடைய தகவல்களை தாருங்கள் என்று சொல்லி இருக்கிறார். அதற்காக நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம் என தெரிவித்தார்.