இந்தியாவின் மிக உயரிய தேர்வான யூபிஎஸ்சி (UPSC) நேர்முகத் தேர்வில், வேட்பாளர்களின் சமயோசித புத்தியைச் சோதிக்கப் பல விசித்திரமான கேள்விகள் கேட்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் ஒரு கேள்வி பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது.

“ஒரு 100 ரூபாய் நோட்டை எடுக்க வேண்டும்; அதை மடிக்கவோ அல்லது கிழிக்கவோ கூடாது. ஆனால், அந்த நோட்டைப் பாதியாக மாற்ற வேண்டும், அது எப்படி?” என்பதுதான் அந்த கேள்வி.

இதைக் கேட்டதும் பலரும் இயற்பியல் ரீதியாக அந்த நோட்டை எப்படிப் பிரிக்கலாம் என்று யோசித்துத் திணறிப் போவார்கள். ஆனால், அந்த இளைஞர் சொன்ன பதில் தான் இப்போது இணையத்தின் ‘ஹைலைட்’. அவர் மிகவும் நிதானமாக, “அந்த 100 ரூபாய் நோட்டைக் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக இரண்டு 50 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வேன்.

இப்போது அந்தப் பணம் எந்தச் சேதமும் இல்லாமல் பாதியாகிவிட்டது” என்று பதிலளித்துள்ளார். இக்கட்டான சூழலில் ஒரு பிரச்சனையை எவ்வளவு எளிமையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அணுகுகிறோம் என்பதைச் சோதிக்கவே இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர்.