மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில், கந்துவட்டிக்கு வாங்கிய பணத்திற்காக ஒரு பெண்ணைத் தொடர்ச்சியாகப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய பகீர் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கந்துவட்டித் தொழில் செய்து வந்த அமித் சாவந்த் என்பவனிடம், பாதிக்கப்பட்ட பெண் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவசரத் தேவைக்காகப் பணம் வாங்கியுள்ளார்.
தொடக்கத்தில் சரியாக வட்டி கட்டி வந்த அந்தப் பெண்ணால், ஒரு கட்டத்தில் பணத்தைச் செலுத்த முடியாமல் போனது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட அமித் சாவந்த், அந்தப் பெண்ணின் வீட்டிற்கே சென்று மிரட்டி அவர் மீது வன்கொடுமை செய்துள்ளான்.
அதோடு நிறுத்தாமல், அந்த வீடியோவைக் காட்டி மிரட்டிப் பலமுறை அப்பெண்ணைச் சீரழித்துள்ளான். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், “அமித் சாவந்தின் செல்போனில் இதுபோல சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் உள்ளன” என்று கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் இன்னும் பல பெண்கள் இவனிடம் சிக்கிச் சீரழிந்துள்ளார்களா? என்ற கோணத்தில் காந்திநகர் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள அமித் சாவந்தின் செல்போனைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், அவனது கூட்டாளிகளையும் வலைவீசித் தேடி வருகின்றனர்.
