உலக  பட்டினி தினமான இன்று தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நடிகர் விஜய் தன் மக்கள் இயக்கம் வாயிலெக்ச 234 தொகுதிகளிலும் மதிய உணவு இலவசமாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இத்திட்டத்திற்கு தளபதி விஜய் ஒருநாள் மதிய உணவு சேவை திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை தாண்டி புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா  மாநிலங்களிலும் மதிய உணவு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்டோருக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மதிய உணவு வழங்கினர்.