தமிழ் சினிமாவில் கில்லி, ஆறு, ஏழுமலை உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தன் மனைவி ராஜோஷியை விவாகரத்து செய்த சூழலில், 2 நாட்களுக்கு முன் ரூபாலி என்ற பெண்ணை 2வது திருமணம் செய்துகொண்டார். இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் பலரும் விமர்சித்தனர். அதற்கு ஆஷிஷ் பதிலளித்ததாவது “60 வயதாகும் உனக்கு திருமணம் தேவையா..? முதல் மனைவிக்கு விவாகரத்து கொடுத்துவிட்டாயா? என்று பலர் என்னை விமர்சனம் செய்கின்றனர்.
இந்த வயதில் வேறு ஒரு துணை எதற்கு எனவும் கேலி செய்கின்றனர். 22 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்ட என் முதல் மனைவிக்கும் எனக்கும் எதிர்காலம் குறித்த எண்ணங்கள் வேறுவேறாக இருந்தது. இதன் காரணமாக நாங்கள் பிரிந்து விட்டோம். பின் எனக்கு ஒரு துணை வேண்டும் என தோன்றியதால் 55 வயதிலேயே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தேன். தற்போது எனக்கு 57 வயது. காதலில் வயதிற்கு வேலையில்லை. இரண்டு பேரும் சந்தோஷமாக இணைந்து பயணிப்போம்” என்று அவர் கூறினார்.
