செங்கோட்டையிலிருந்துஅரசு பேருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஆனந்தன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நவாச்சாலை அருகே இருக்கும் அளவில் திரும்ப முயன்றபோது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து அரசு பேருந்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பெண் காவலர் கனகலட்சுமி, கல்லூரி மாணவர் அஜித் குமார் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு தென்காசி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.